பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழைப் பெற தேவையான ஆவணங்கள்
01. | வெளிவிவகார அமைச்சினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி மற்றும் வெளிவிவகார அமைச்சினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் ஆங்கில மொழிபெயர்ப்பு | 03பிரதிகள் |
02. | குழந்தை பிறந்த சந்தர்ப்பத்தில் பெற்றோரின் கைவசம் இருந்த கடவுச்சீட்டுகளின் 2,3,4,5 ஆம் பக்கங்கள் மற்றும் செல்லுபடியான விசா பக்கம் | 02பிரதிகள் |
03. | திருமண பதிவுச் சான்றிதழ் – (மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) | 02பிரதிகள் |
04. | குழந்தையின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் (மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) | 02பிரதிகள் |
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களினதும் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
கட்டண விபரம்
பிறப்புப் பதிவு | 08KD |
குடியுரிமைப் பதிவு | 15KD |
குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது தாமதித்த ஒவ்வொரு வருடத்துக்கும் தலா 02 KD வீதம் கட்டணம் அறவிடப்படும் |
தேவையான காலம்
- குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் பதிவுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக பிறப்புச் சான்றிதழை தூதரகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
- குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் பதிவுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் பிறப்புச் சான்றிதழை பெற 45 தொடக்கம் 60 வரையிலான நாட்கள் செல்லலாம். குறித்த பிறப்புச் சான்றிதழை வழங்க இலங்கை பதிவாளர் நாயகத்தின் அனுமதி அவசியமாகும்.
- குடியுரிமைச் சான்றிதழ் கிடைக்கப் பெற 06 மாதங்கள் தொடக்கம் 1 ½ வருடங்கள் ஆகலாம். திணைக்களம் விண்ணப்பதாரியின் விண்ணப்பத்தில் குறைபாடுகளை காணும் பட்சத்தில் தாமதமாக நேரிடலாம் என்பதனை கருத்திற் கொள்ளவும்