இறப்பைப் பதிவு செய்வதற்கு :
- இறந்தவரின் இரத்த உறவுகள் (தந்தை/தாய்/கணவன் அல்லது மனைவி / பிள்ளைகள் / உடன் பிறந்தவர் ) குவைத் நாட்டில் இருப்பின் தூதரகத்தின் வாயிலாக இறப்புச் சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம்.
- இறந்தவரின் இரத்த உறவுகள் இலங்கையில் வசிப்பதாயின் பதிவாளர் திணைக்களத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
- மரண பதிவு விண்ணப்பம் – தூதரகத்தில் பெற்றுக் கொள்ளலாம்
- குவைத் நாட்டினால் வழங்கப்பட்ட மரண சான்றிதழ் மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு
- மரணித்தவரின் கடவுச்சீட்டுபிரதி
- கடவுச்சீட்டின் தரவுகள் பக்கத்தின் பிரதி (2-3 ம் பக்கங்கள்)
- வீசா விபர பக்கத்தின் பிரதி
- குவைத் அடையாள அட்டையின் பிரதி
- உறவு முறையை உறுதிப்படுத்தும் ஆவணம்
- கணவன் அல்லது மனைவி இறக்கும் பட்சத்தில் திருமணச் சான்றிதழ்
- தாய் , தந்தை அல்லது பிள்ளைகளின் இறப்பின் போது பிறப்புச் சான்றிதழ்
- விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு மற்றும் குவைத் அடையாள அட்டையின் பிரதி
- இறந்தவரின் உடல் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பின் அதற்குரிய ஆவணங்கள்
- பதிவுக் கட்டணம் : 04 KD