தேவையான ஆவணங்கள்
கடவுச்சீட்டொன்றை பெற விண்ணப்பித்தல்
- முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்
- கடந்த மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள் (3.5 x 4.5 சென்றி மீற்றர் அளவு மற்றும் நீல நிற பின்னணி )
- தற்போது பாவனையிலுள்ள கடவுச்சீட்டு
- கடவுச்சீட்டின் பிரதி :
- புகைப்படம் மற்றும் தரவுகள் அடங்கிய பக்கம் (2ம் மற்றும் 3ம் இலக்க பக்கங்கள் )
- திருத்தங்கள் மற்றும் அவதானங்கள் பக்கம்(4ம் மற்றும் 5ம் இலக்க பக்கங்கள் )
- புகைப்படத்தில்
- முகம், காதுகள் , தெளிவாக தெரிய வேண்டும்.
- தலை முடி முகத்தை மறைக்காத வகையில் மூக்குக் கண்ணாடி அணியாது இருத்தல் வேண்டும்.
- கீழ்வரும் அமைப்பில் உள்ள புகைப்படங்கள் நிராகரிக்கப்படும்
- மூக்குக் கண்ணாடி அணிந்திருத்தல்.
- நெற்றியில் பொட்டு வைத்திருத்தல்
- தலையை மறைத்த நிலையில் இருத்தல்
- நீங்கள் சமர்ப்பிக்கும் புகைப்படங்கள் மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
- கடவுச்சீட்டில் தற்போதுள்ள தொழிலை சேர்க்க விரும்பினால் தேவையான கல்வி மற்றும் தொழில் தகைமைச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ள முடியும். வதிவிட வீசாவில் குறிப்பிடப்பட்டுள்ளமை மட்டும் போதாது என்பதனை கவனத்திற் கொள்ளவும்.
- கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவத்தில் 7 மற்றும் 9 ஆகிய இலக்கங்களுடைய கூண்டுகளினுள் முறையே உங்களது தற்போதைய இலங்கை முகவரி மற்றும் குவைத் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை சரியாக குறிப்பிடத் தவற வேண்டாம்.
- காணாமல் போன கடவுச்சீட்டுக்குப் பதிலாக புதிய கடவுச்சீட்டை பெற விண்ணப்பிக்கும் போது குவைத் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (CID)வழங்கும் அறிக்கையினை சமர்ப்பிப்பது அவசியமாகும்.
- உங்களது விண்ணப்பம் பூரணமாக இருக்கும் பட்சத்தில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பட்டு 45 தொடக்கம் 60 நாட்களுக்குள் உங்களது கடவுச்சீட்டு தயாராகிவிடும். திணைக்களம் விண்ணப்பதாரியின் விண்ணப்பத்தில் குறைபாடுகளை காணும் பட்சத்தில் தாமதமாக நேரிடலாம் என்பதனை கருத்திற் கொள்ளவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள்
- விண்ணப்பம் ஆங்கில பெரிய எழுத்தில் (Capital Letters) பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
- புகைப்படத்துக்குக் கீழால் உள்ள கூண்டினுள் மாத்திரம் கையொப்பமிடுங்கள்.
- தெளிவான புகைப்படங்களை சமர்ப்பியுங்கள். விண்ணப்பப் படிவம் மற்றும் மூலப்பிரதிகளின் பிரதிகளும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பிறந்த குழந்தையொன்றுக்கு முதற் தடவையாக கடவுச்சீட்டைப் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- தூதரகத்தின் கொன்சியுலர் பிரிவினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி
- இலங்கை குடியுரிமைச் சான்றிதழின் பிரதி
- குடியுரிமைச் சான்றிதழைப் பெற விண்ணப்பித்த பற்றுச்சீட்டின் பிரதி
- பெற்றோரின் திருமண சான்றிதழின் பிரதி
- தந்தையின் கடவுச்சீட்டின் தரவுகள் பக்கத்தின் பிரதி(2ம் மற்றும் 3ம் இலக்க பக்கங்கள் )
- தந்தையின் கடவுச்சீட்டின் பிள்ளைகளின் விபரங்கள் அடங்கிய பக்கத்தின் பிரதி(6ம் மற்றும் 7ம் இலக்க பக்கங்கள் )
- தாயின் கடவுச்சீட்டின் தரவுகள் பக்கத்தின் பிரதி(2ம் மற்றும் 3ம் இலக்க பக்கங்கள் )
- தாயின் கடவுச்சீட்டின் பிள்ளைகளின் விபரங்கள் அடங்கிய பக்கத்தின் பிரதி(6ம் மற்றும் 7ம் இலக்க பக்கங்கள் )
- குழந்தைக்கு தனியான ஒரு கடவுச்சீட்டை விநியோகிப்பது தொடர்பில் பெற்றோரின் விருப்பக் கடிதம.
(மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களினதும் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
தற்போது கடவுச்சீட்டு உள்ள குழந்தையொன்றுக்கு அதனை புதுப்பிக்க சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- தற்போது பாவனையிலுள்ள கடவுச்சீட்டின் தரவுகள் பக்கம் மற்றும் அவதானங்களும் திருத்தங்களும் அடங்கிய பக்கங்களின் பிரதி (2ம் மற்றும் 3ம் இலக்க பக்கங்கள் )
- தூதரகத்தின் கொன்சியுலர் பிரிவினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி
- குடியுரிமைச் சான்றிதழின் பிரதி
- தந்தையின் கடவுச்சீட்டின் தரவுகள் பக்கத்தின் பிரதி
- தாயின் கடவுச்சீட்டின் தரவுகள் பக்கத்தின் பிரதி
- குழந்தைக்கு தனியான ஒரு கடவுச்சீட்டை விநியோகிப்பது தொடர்பில் பெற்றோரின் விருப்பக் கடிதம்
(மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களினதும் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
கடவுச்சீட்டு சம்பந்தமான கட்டணங்கள்
சேவைகள் சம்பந்தமான விபரங்கள் | திருத்தப்பட்ட கட்டணம் (KD) | |
01. | சகல நாடுகளுக்குமான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு | 48/- |
02. | சகல நாடுகளுக்குமான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில் (பழைய கடவுச்சீட்டின் பிரதியை சமர்ப்பிக்கும் பட்சத்தில்) | 113/- |
03. | சகல நாடுகளுக்குமான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில் (பழைய கடவுச்சீட்டின் பிரதியை சமர்ப்பிக்காத பட்சத்தில்) | 144/- |
04. | மூன்று (03) வருடங்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு | 39/- |
05. | மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டினை சகல நாடுகளுக்குமான செல்லுபடியாகும் கடவுச்சீட்டாக மாற்றுவதற்கு | 20/- |
06. | இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டுகள் (NMRP) | 16/- |
07. | இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டு (NMRP) காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில் (இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரம்) | 51/- |
08. | திருத்தங்கள் மேற்கொள்ள | 4/- |
09. | இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டுகள் சம்பந்தமாக (NMRP) – பழைய 06 மாத காலத்திற்கானது (இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரம்) | 9/- |