உறுதிப்படுத்தப்படும் / அத்தாட்சிப்படுத்தப்படும் ஆவணங்கள்
- இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள்
- ஆவணங்களை மொழி மாற்றம் செய்தல்
- உறுதி மொழி அல்லது பொது அதிகார பத்திரம்
- ஓய்வூதிய ஆவணங்கள்
- பல்வேறு தேவைகளின் நிமித்தம் இலங்கையின் பலதரப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள்
- ஏற்றுமதி ஆவணங்கள்
- இலத்திரனியல் ஆவண உறுதிப்படுத்தல் முறைமை (e-DAS)
- இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவில் உறுதிப்படுத்திய பின்னர் மொழிபெயர்ப்புக்காக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் போது அதன் மூலப்பிரதி உறுதிப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் . மொழிபெயர்ப்பு பிரதிகள் நிராகரிக்கப்படும்.
- வாகன ஓட்டுனர் உரிமம் மொழிபெயர்ப்புக்காக சமர்ப்பிக்கப்படும் போது வாகன ஓட்டுனர் உரிமத்தோடு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- உறுதி மொழி அல்லது பொது அதிகார பத்திரங்களில் கையொப்பமிட ஆவண உரிமையாளரின் கடவுச்சீட்டின் மூலப்பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- பொது அதிகார பத்திரங்களில் கையொப்பமிடும் போது இரண்டு இலங்கையர்களை சாட்சிகளாக அழைத்து வர வேண்டும். அவர்களிடம் கடவுச்சீட்டு அல்லது குவைத் அடையாள அட்டை காணப்படல் வேண்டும்.
- ஓய்வூதிய ஆவணங்கள் மற்றும் கையொப்பமிடலுக்காக சமர்ப்பிக்கப்படும் ஏனைய அனைத்து வகையான சந்தர்ப்பங்களின் போதும் விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டின் மூலப்பிரதி கட்டாயம் இருத்தல் வேண்டும்.
- இலத்திரனியல் ஆவண உறுதிப்படுத்தல் முறைமை (e-DAS) ஊடாக ஆவணங்களை உறுதிப்படுத்த குறிப்பிட்ட ஆவணங்களின் மூலப்பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம்:
- ஆவணமொன்றை அத்தாட்சிப்படுத்தல் 09 KD
- ஆவணமொன்றை மொழிமாற்றம் செய்தல் 09 KD
- பொது அதிகார பத்திரம் / சத்தியக் கடதாசி 15KD
- ஏற்றுமதி ஆவணங்கள் 13KD
- இலத்திரனியல் முறைமை வாயிலாக அத்தாட்சிப்படுத்தல் 08 KD