திருமணப் பதிவு

தூதரகத்தில் பதிவுத் திருமணம் செய்ய விரும்பினால்

  • கட்டாயம் 18 வயதைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்
  • திருமணமாகாதவர் என்பதை உறுதிப்படுத்த விண்ணப்பதாரிகள் இருவரும் தூதரக அதிகாரி ஒருவரின் முன்னிலையில் உறுதிப்பிரமாணம் ஒன்றை வழங்க வேண்டும்.
  • ஏலவே விவாகரத்துப் பெற்றவர் திருமணப்பதிவு செய்ய அவரது  இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட விவாகரத்து சான்றிதழ் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விதவையொருவர் மணமுடிக்க விரும்பின் மரணித்த கணவரின் வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட  மரண சான்றிதழ்  பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தம்பதிகளின் வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழ் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் இரண்டு
  • குவைத் நாட்டின் செல்லுபடியான வதிவிட  அனுமதி – அகாமா உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  • இரண்டு சாட்சிகள் முன்னிலைப்படுத்தப்படல் வேண்டும்.
  • வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்ய விரும்பினால் , அந்நாட்டவரின் தூதரகத்தினால் அனுமதி கடிதத்தை பெற்று குவைத்   வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தி சமர்ப்பிக்க  வேண்டும்.
  • வேறு ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் அவை அனைத்தும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதனை கவனத்திற் கொள்க.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் திருமணம் தொடர்பிலான அறிவித்தல்  30 நாட்களுக்கு அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்படும்.  பின்னர் திருமண திகதி அறிவிப்பு செய்யப்படும்.

திருமண அறிவித்தலுக்கு  06 குவைத் தீனார்களும் திருமணப் பதிவுக்கு 10 குவைத் தீனார்களும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பிறிதொரு வெளிநாட்டு தூதரகத்தில் திருமணம் செய்ய விரும்பினால்

இத்தகைய சந்தர்ப்பங்களில் தூதரகம் ஒரு ஆட்சேபனை இல்லாக் கடிதத்தை மட்டுமே வழங்கும்.அக்கடிதத்தைப் பெற கீழ்வரும் ஆவணங்களை தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • நீங்கள் திருமணமாகாதவர் என்பதை உறுதிப்படுத்த தூதரக அதிகாரி ஒருவரின் முன்னிலையில் உறுதிப்பிரமாணம் ஒன்றை வழங்க வேண்டும்.
  • கடவுச்சீட்டு
  • குவைத் அடையாள அட்டை
  • விவாகரத்துப் பெற்றவர் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட விவாகரத்து சான்றிதழ் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விதவையொருவர் மரணித்த கணவரின் வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட  மரண சான்றிதழ்  பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆட்சேபனை இல்லாக் கடிதத்தை பெற செலுத்த வேண்டிய கட்டணம் : 09 KD

குவைத் நாட்டின் சட்டங்களுக்கு அமைய குவைத் அதிகாரிகளின் முன்னிலையில் திருமணம் செய்ய விரும்பினால்

இத்தகைய சந்தர்ப்பங்களில் அரபு மொழியில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆட்சேபனை இல்லாக் கடிதம் மட்டுமே எம்மால் வழங்கப்படும் . அக்கடிதத்தைப் பெற கீழ்வரும் ஆவணங்களை தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

  • நீங்கள் திருமணமாகாதவர் என்பதை உறுதிப்படுத்த தூதரக அதிகாரி ஒருவரின் முன்னிலையில் உறுதிப்பிரமாணம் ஒன்றை வழங்க வேண்டும்.
  • கடவுச்சீட்டு
  • குவைத் அடையாள அட்டை
  • விவாகரத்துப் பெற்றவர் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட விவாகரத்து சான்றிதழ் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விதவையொருவர் மரணித்த கணவரின் வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட  மரண சான்றிதழ்  பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆட்சேபனை இல்லாக் கடிதத்தை பெற செலுத்த வேண்டிய கட்டணம் : 09 KD
Skip to content