இறப்பைப் பதிவு செய்வதற்கு :

  1. இறந்தவரின் இரத்த உறவுகள் (தந்தை/தாய்/கணவன் அல்லது மனைவி / பிள்ளைகள் / உடன் பிறந்தவர் ) குவைத் நாட்டில் இருப்பின் தூதரகத்தின் வாயிலாக இறப்புச் சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம்.
  2. இறந்தவரின் இரத்த உறவுகள் இலங்கையில் வசிப்பதாயின் பதிவாளர் திணைக்களத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :

  1. மரண பதிவு விண்ணப்பம் – தூதரகத்தில் பெற்றுக் கொள்ளலாம்
  2. குவைத் நாட்டினால் வழங்கப்பட்ட  மரண சான்றிதழ் மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு
  3. மரணித்தவரின் கடவுச்சீட்டுபிரதி
    • கடவுச்சீட்டின் தரவுகள் பக்கத்தின் பிரதி (2-3 ம் பக்கங்கள்)
    • வீசா விபர பக்கத்தின் பிரதி
    • குவைத் அடையாள அட்டையின் பிரதி
  4. உறவு முறையை உறுதிப்படுத்தும் ஆவணம்
    • கணவன் அல்லது மனைவி இறக்கும் பட்சத்தில் திருமணச் சான்றிதழ்
    • தாய் , தந்தை அல்லது பிள்ளைகளின் இறப்பின் போது பிறப்புச் சான்றிதழ்
  5. விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு மற்றும் குவைத் அடையாள அட்டையின் பிரதி
  6. இறந்தவரின் உடல் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பின் அதற்குரிய ஆவணங்கள்
  7. பதிவுக் கட்டணம் : 04 KD
Skip to content